/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தியாகி விஸ்வநாததாஸ் நகரில் ரோடு வசதியின்றி மக்கள் அவதி தியாகி விஸ்வநாததாஸ் நகரில் ரோடு வசதியின்றி மக்கள் அவதி
தியாகி விஸ்வநாததாஸ் நகரில் ரோடு வசதியின்றி மக்கள் அவதி
தியாகி விஸ்வநாததாஸ் நகரில் ரோடு வசதியின்றி மக்கள் அவதி
தியாகி விஸ்வநாததாஸ் நகரில் ரோடு வசதியின்றி மக்கள் அவதி
ADDED : ஜூன் 16, 2024 04:10 AM

சாத்துார்: சாத்துார் அருகே தியாகி விஸ்வநாதாஸ் நகரில் ரோடு வசதி இன்றி அப் பகுதி மக்கள் அவதித்து உள்ளாகி வருகின்றனர்.
விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் இ.முத்துலிங்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தியாகி விஸ்வநாததாஸ் நகரில் முறையான ரோடு , தெருவிளக்கு வசதி இன்றி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தியாகி விஸ்வநாததாஸ் நகர் பகுதியில் திருமண மண்டபங்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, ஆர்.டி.ஓ.அலுவலகம், லாரி செட் மற்றும் குடியிருப்பு வீடுகள் பல உள்ளன.
விருதுநகர் சாத்துார் நான்கு வழிச்சாலையின் அருகே அமைந்துள்ள இந்த நகருக்கு செல்லும் ரோடு கற்கள் பெயர்ந்து கால்களை பதம் பார்க்கும் வகையில் உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் மெட்டல் ரோடு அமைக்கப்பட்டது. இந்த ரோடு வழியாக கனரக வாகனங்கள் அடிக்கடி சொல்வதால் கற்கள் பெயர்ந்து விட்டன.
நகரில் வசிப்பவர்கள் இருசக்கர வாகனங்களில் வரும்போது கரடு முரடான பாதையில் நிலை தடுமாறி கீழே விழும் நிலை உள்ளது.
மேலும் நகருக்கு செல்லும் ரோட்டில் உள்ள மின்கம்பங்களில் இருந்த விளக்குகளை மர்ம நபர்கள் கல் வீசி வீசி உடைத்துள்ளனர்.
இதனால் இரவு நேரத்தில் இந்தப் பகுதியை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. நகரில் வசிப்பவர்கள் கையில் விளக்கு படன் நடமாடும் நிலை உள்ளது.
அடிப்படை வசதியான ரோடு தெருவிளக்கு வசதியின்றி தியாகி விஸ்வநாததாஸ் நகர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
ரோடு போட வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகியிடம் பலமுறை வலியுறுத்தியும் இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர். இனியும் காலதாமதம் செய்யாமல் தார் ரோடு அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.