/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்
ADDED : ஜூன் 16, 2024 04:09 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தொழிலாளர் நலத்துறை, வேர்ல்ட் விஷன் இந்தியா சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் பேசியதாவது;
விருதுநகர் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் முறையை ஒழிக்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல் அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும்.
குழந்தைகள் கல்வி பெற்று அவர்கள் வாழ்க்கையில் முன்னேற நாம் பாடுபட வேண்டும். குறிப்பாக குழந்தைகளை பட்டாசு தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு அனுப்புவதை தடுக்க வேண்டும்.
குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வாறு ஏதேனும் குழந்தை தொழிலாளர்கள் இருந்தால் அவர்களை மீட்க பொதுமக்கள் 1098 என்ற இலவச எண்ணை அழைத்து குழந்தையை மீட்க உதவி செய்ய வேண்டும் என்றார்.
விழாவில் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், தொழிலாளர் துறை அலுவலர்கள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். பின்னர் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை நீதிபதி ஜெயக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். விழா ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர் செய்திருந்தனர்.