Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட்- அரசு மருத்துவமனை வழித்தடத்தில் பஸ்கள் பயணிகள் எதிர்பார்ப்பு

விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட்- அரசு மருத்துவமனை வழித்தடத்தில் பஸ்கள் பயணிகள் எதிர்பார்ப்பு

விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட்- அரசு மருத்துவமனை வழித்தடத்தில் பஸ்கள் பயணிகள் எதிர்பார்ப்பு

விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட்- அரசு மருத்துவமனை வழித்தடத்தில் பஸ்கள் பயணிகள் எதிர்பார்ப்பு

ADDED : மார் 14, 2025 06:27 AM


Google News
விருதுநகர்: விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து அரசு மருத்துவமனை செல்ல இரண்டு பஸ்கள் மாறி செல்ல வேண்டியுள்ளது. இந்த சிக்கலை போக்க சுழற்சி முறையில் காரியாபட்டி செல்லும் பஸ்களை புது பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விருதுநகர் புது பஸ் ஸ்டாண்ட் கடந்தாண்டு ஆக. 21 முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. இங்கு பஸ்கள் சிரமமின்றி சென்று வருவதற்காக தேவைக்கு ஏற்ப போக்குவரத்து, வழித்தடங்களில் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படுகிறது.

மேலும் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், வத்திராயிருப்பு, சிவகாசி, அதனை சுற்றிய புறநகர், ஊரகப்பகுதிகளில் பலரும் பரிசோதனை, சிகிச்சைக்காகவும், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்களை பார்த்து செல்வதற்காகவும் தினமும் வந்து செல்கின்றனர்.

இவர்கள் அனைவரும் விருதுநகர் புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்து இறங்கி, அதன் பின் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் பஸ்சில் ஏறி இறங்குகின்றனர். இங்கிருந்து காரியாபட்டி, பாண்டியன் நகர், பேராலி, துலுக்கன்குளம், கல்குறிச்சி உள்ளிட்ட அரசு மருத்துவமனை வழியாக செல்லும் பஸ்களில் ஏறி பயணிக்க வேண்டிய நிலையே தொடர்கிறது.

இவர்கள் மீண்டும் இதே நிலையில் பயணித்து புது பஸ் ஸ்டாண்டில் இருந்து தங்கள் பகுதிகளுக்கு செல்கின்றனர். இந்த பிரச்னை புது ஸ்டாண்ட் செயல்பாட்டுக்கு வந்த நாள் முதல் நிலவுகிறது. ஆனால் இதுவரை தீர்வு எடுக்கப்படவில்லை. விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து காரியாபட்டிக்கு அதிக அளவிலான பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்த பஸ்களை ஒவ்வொன்றாக சுழற்சி முறையில் நேரம் ஒதுக்கி புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை வழியாக இயக்கினால் பயணிகள் பயன் அடைவார்கள், அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

எனவே புது பஸ் ஸ்டாணடில் இருந்து அரசு மருத்துவமனைக்கு சென்று வருபவர்களின் நலன் கருதி சுழற்சி முறையில் காரியாபட்டி பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us