/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஜூன் 19ல் சாத்துாரில் 'உங்களை தேடி உங்கள் ஊர்' முகாம் ஜூன் 19ல் சாத்துாரில் 'உங்களை தேடி உங்கள் ஊர்' முகாம்
ஜூன் 19ல் சாத்துாரில் 'உங்களை தேடி உங்கள் ஊர்' முகாம்
ஜூன் 19ல் சாத்துாரில் 'உங்களை தேடி உங்கள் ஊர்' முகாம்
ஜூன் 19ல் சாத்துாரில் 'உங்களை தேடி உங்கள் ஊர்' முகாம்
ADDED : ஜூன் 18, 2024 06:41 AM
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
சாத்துாரில் 'உங்களை தேடி உங்கள் ஊரில்' என்ற புதிய திட்டத்தின்முகாம் ஜூன் 19 காலை 9:00 மணி முதல் மறு நாள் ஜூன் 20 காலை 9:00 மணி வரை நடக்கிறது.
கலெக்டர், மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடி சென்று குறைகளை கேட்டறிகின்றனர். பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுப்படுத்தவும், வழங்கப்பவும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும்,மக்களை நாடி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட உள்ளது.
மாணவர்களுக்கு தேவையான சாதி, வருவாய், இருப்பிட சான்றுகளை விண்ணப்பிக்க, ஆதார் திருத்தங்கள் செய்ய மனுக்கள் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே இதை சாத்துார் பகுதி மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். குறைகளை நேரடியாக கலெக்டரிடம் தெரிவிக்கலாம், என்றார்.