ADDED : ஜூன் 02, 2024 03:09 AM
தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே சேத்துார் ஜீவா நகரை சேர்ந்தவர் நீராவி 65, வாட்ச்மேன்.
இவரது வீட்டின் அருகே வசிப்பவர் அய்யனார் 48. இரவு நேரங்களில் வீட்டின் வெளியே வந்து அசிங்கமாக சத்தமிட்டு பேசி வந்துள்ளதை நீராவி கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில் அய்யனார், நீராவியை கத்தியால் குத்தியதில் பலியானார்.தளவாய்புரம் போலீசார் அய்யனாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.