/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாநிலங்களுக்கிடையோன இறகுப்பந்து போட்டி மாநிலங்களுக்கிடையோன இறகுப்பந்து போட்டி
மாநிலங்களுக்கிடையோன இறகுப்பந்து போட்டி
மாநிலங்களுக்கிடையோன இறகுப்பந்து போட்டி
மாநிலங்களுக்கிடையோன இறகுப்பந்து போட்டி
ADDED : ஜூன் 02, 2024 03:10 AM
அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., இன்டர்நேஷனல் பள்ளியில் நடந்த மாநிலங்களுக்கிடையான இறகுப்பந்து போட்டியை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார்.
எஸ்.பி.கே., இன்டர்நேஷனல் பள்ளி சார்பாக 2 நாட்கள் நடைபெறும் போட்டியின் துவக்க விழா நேற்று நடந்தது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதி லக்ஷ்மி, நாடார் உறவின்முறை தலைவர் சுதாகர், அவரின் மனைவி சசிகலா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றினர்.
போட்டி மைதானத்தில் அமைச்சர் இறகுப்பந்தை சர்வீஸ் போட்டு துவக்கி வைத்தார். கர்நாடகா, கேரளா, பாண்டிச்சேரி உட்பட மாநிலங்களில் இருந்து 300 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் 11,13, 15, 17, 19 வயதிற்கு உட்பட்ட பிரிவுகளில் ஆண்கள், பெண்கள், இரட்டையர் என போட்டிகள் நடந்தது.
முன்னாள் நகராட்சி தலைவர் சிவபிரகாசம், எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர் காசிமுருகன், இன்டர்நேஷனல் பள்ளி தலைவர் ராஜேஷ் , பள்ளி நிர்வாகிகள், பார்வையாளர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். செயலர் காசிமுருகன் நன்றி கூறினார்.