/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ விழா தேரோட்டம் நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ விழா தேரோட்டம்
நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ விழா தேரோட்டம்
நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ விழா தேரோட்டம்
நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்ஸவ விழா தேரோட்டம்
ADDED : ஜூன் 26, 2024 07:38 AM

சிவகாசி : சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்ஸவம் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது.
சிவகாசி அருகே திருத்தங்கல் நின்ற நாராயணபெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று.
இந்த ஆண்டு ஆனி பிரம்மோற்ஸவ திருவிழா ஜூன் 17ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் இரவு ேஷஷ, கருடன், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமிகள் ரத வீதி உலா நடந்தது.
ஜூன் 21ல் இரவு கருட சேவையும், ஜூன் 23ல் இரவு சயன சேவையும் நடந்தது. நேற்று தேரோட்டம் நடந்தது.
முன்னதாக தேரில் நின்ற நாராயணப்பெருமாள் செங்கமலத்தாயாருடன் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளை தொடர்ந்து தேரோட்டம் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேருக்கு முன்பாக பெண்கள் கோலாட்டம் ஆடி சென்றனர். ஏற்பாடுகளை கோயில் ததியாராதனை டிரஸ்ட், நிர்வாகத்தினர் செய்தனர்