/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இரண்டு மாதத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு நாய்கடி இரண்டு மாதத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு நாய்கடி
இரண்டு மாதத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு நாய்கடி
இரண்டு மாதத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு நாய்கடி
இரண்டு மாதத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு நாய்கடி
ADDED : ஜூன் 03, 2024 02:37 AM
சேத்துார்: சேத்துார் அருகே கடந்த இரண்டு மாதத்திற்குள் அதிகமானோர் நாய் கடிக்கு ஆளாகி உள்ளதால் தகுந்த நடவடிக்கை எடுக்க குடியிருப்பு வாசிகள் எதிர்பார்த்துள்ளனர்.
சேத்துார் நாடார் புது தெரு அருகே குருக்களையார் சந்து பகுதியில் பராமரிப்பற்ற வகையில் சுற்றி திரியும் நாய்கள் கடந்த இரண்டு மாதத்திற்குள் 10க்கும் அதிகமானோரை கடித்துள்ளது.
இது குறித்து ஏற்கனவே பேரூராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் மனு அளிக்க கூறி உள்ளனர். இந்நிலையில் சம்பந்தப்பட்ட பகுதியில் நாய்கள் பொதுமக்களை விரட்டி கடிப்பதும் தொடர்வதால் உள்ளாட்சி நிர்வாகம் பெருகியுள்ள நாயை அப்புறப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து விவேகானந்தன்: தெருவிற்கு 10 நாய்கள் என்ற வகையில் அதன் சந்ததி ஒரே ஆண்டில் நான்கு மடங்கு பெருகி மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ரேபிஸ் நோய் சிக்கலை பற்றி குடியிருப்பு வாசிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி சம்பந்தப்பட்ட நாய் கண்காணித்து அப்புறப்படுத்த வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.