/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அருப்புக்கோட்டையில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம் அருப்புக்கோட்டையில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம்
அருப்புக்கோட்டையில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம்
அருப்புக்கோட்டையில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம்
அருப்புக்கோட்டையில் மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 10, 2024 06:23 AM

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை 7:30 மணிக்கு நடந்தது.
புதன்கிழமை கணபதி ஹோமம், விக்னேஸ்வர் பூஜை, தன பூஜை, நவக்கிரக ஹோமம் நடந்தது. வியாழக்கிழமை வாஸ்து சாந்தி, புனித தீர்த்தம் எடுத்து வருதல் தீபாராதனை நடந்தது. வெள்ளிக்கிழமை பரிவார மூர்த்திகள், கும்ப அலங்காரம், யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் மூன்றாம் கால பூஜைகள் நடந்தது நேற்று காலை மூலவர், அம்பாள், விமானங்கள், ராஜகோபுரம், அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் நிகழ்ச்சியை நடத்தினர்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஹிந்து அற நிலையத் துறை இணை இயக்குனர் செல்லதுரை, சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேக கமிட்டி தலைவர் சுப்பாராஜ், செயலாளர் விஜயகுமார், தொழிலதிபர்கள் கணேசன், முருகன், கோயில் செயல் அலுவலர் தேவி, தக்கார் சந்திரமோகன், அமைச்சரின் மகன் ரமேஷ், நகராட்சி தலைவர் சுந்தரலட்சுமி, துணை தலைவர் பழனிச்சாமி, முன்னாள் நகராட்சி தலைவர் சிவப்பிரகாசம், தி.மு.க., நகரச் செயலாளர் மணி உட்பட விழா குழுவினர், சமுதாய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.