Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விலைவாசிக்கு ஏற்ப ஊதியம் இல்லாமை ; நெசவாளர்கள் தொழிலில் தொடர் சிக்கல்

விலைவாசிக்கு ஏற்ப ஊதியம் இல்லாமை ; நெசவாளர்கள் தொழிலில் தொடர் சிக்கல்

விலைவாசிக்கு ஏற்ப ஊதியம் இல்லாமை ; நெசவாளர்கள் தொழிலில் தொடர் சிக்கல்

விலைவாசிக்கு ஏற்ப ஊதியம் இல்லாமை ; நெசவாளர்கள் தொழிலில் தொடர் சிக்கல்

ADDED : ஜூலை 27, 2024 06:19 AM


Google News
ராஜபாளையம் : மாவட்டத்தில் கைத்தறி நெசவாளர்கள் விலைவாசிக்கு ஏற்ப ஊதியம் இல்லாமல் அறிவிக்கப்படாத ரகங்கள் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் மாம்பழம் மற்றும் தென்னை விவசாயத்திற்கு அடுத்து நெசவு மற்றும் நுால் சார்ந்த துணி உற்பத்தி அதிகம் உள்ளது. ராஜபாளையம் நகரை ஒட்டிய ஆவரம்பட்டியில் பருத்தி சேலைகளும், சத்திரப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் மருத்துவ துணியும், தளவாய்புரம், செட்டியார்பட்டி, முகவூரில் ரெடிமேட், நைட்டி உள்ளாடைகள் உற்பத்தி பிரதானமாக உள்ளது. துணி உற்பத்திக்கு மூல காரணம் என்பது கைத்தறி நெசவு தொழிலில் இருந்தே தொடங்குகிறது.

சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ராஜபாளையம் சத்திரப்பட்டி புனல் வேலி, முத்துச்சாமிபுரம் தளவாய்புரம் சேத்துார், சொக்கநாதன் புத்துார், ஆவாரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கைத்தறி பிரதான தொழிலாக இருந்துள்ளது.

குறிப்பாக பொங்கலுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

இதற்காக ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கும் நெசவாளர் கூட்டுறவு உற்பத்தி விற்பனை சங்ங்கள் இன்றும் இயங்கி வருகிறது.

இதில் 5000 திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் நேரடி உறுப்பினராக இருந்தும் உப தொழில்களான கண்டு தயாரித்தல், தார் சுற்றுதல், சாயம் ஏற்றுதல், பாவு, உற்பத்தி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர்.

கைத்தறி துறை மூலம் கொள்முதல் செய்யப்படும் நூல் உற்பத்தி சங்கம் மூலம் இலவச சேலையை உற்பத்தி செய்து கூட்டுறவு சங்கத்தின் மூலம் ரூ.85 கிடைத்து வந்தது.

இந்நிலையில் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு 2012ல் 90 விழுக்காடு மானியத்துடன் மின்சாரம் இலவசமாக்கப்பட்டு கைத்தொழில் அனைத்தும் பெடல் தறியாக மாற்றப்பட்டது.

உடல் உழைப்பு குறைவு உற்பத்தி அதிகம் என்பதால் கூலிரூ.68 ஆக குறைக்கப்பட்டது. இறுதியில் 2015 கூலியை உயர்த்தக்கோரி நெசவாளர்கள் போராட்டம் நடத்தியதால் மீட்டர் ஒன்றுக்கு ரூ. 4 உயர்த்தப்பட்டது.

நெசவாளர் பதினைந்து மணி நேரத்திற்கு மேல் நின்று வேலை செய்தாலும் அவரால் ரூ.280 மட்டுமே தினக்கூலியாக பெற முடியும். இதில் உப தொழில்களில் ஈடுபடும் முதியோர்களின் நிலை என்பது 8 மணி நேரம் ஒரு இடத்தில் அமர்ந்து தார் சுற்றினால் நாள் ஒன்றுக்கு 40 வரை மட்டுமே கூலியாக கிடைக்கிறது. நெசவாளர் குடும்பங்களை சேர்ந்த சிறுவர்கள் தங்களின் பெற்றோர் படும் துயரத்தை அறிந்து மாற்றுத் தொழிலுக்கு சென்று விட்டனர்.

அரசு வழங்கி வந்த முத்ரா கடன் திட்டம், இறப்புக்கு பின் வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

அழிந்து வரும் பாரம்பரிய கைத்தறி தொழிலை காப்பாற்ற தமிழக அரசு, கைத்தறி துறை, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நெசவாளர்களின் கோரிக்கையாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us