/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விரக்தியில் சிங்கநாதபுரம் கண்மாய் பாசன விவசாயிகள் விரக்தியில் சிங்கநாதபுரம் கண்மாய் பாசன விவசாயிகள்
விரக்தியில் சிங்கநாதபுரம் கண்மாய் பாசன விவசாயிகள்
விரக்தியில் சிங்கநாதபுரம் கண்மாய் பாசன விவசாயிகள்
விரக்தியில் சிங்கநாதபுரம் கண்மாய் பாசன விவசாயிகள்
ADDED : ஜூன் 20, 2024 04:18 AM

காரியாபட்டி: கண்மாய் துார் வாரி பல ஆண்டுகளாச்சு , கரைகள் சேதம் அடைந்து, அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருவதால் கண்மாய்க்கு வரும் மழை நீர், வீணாக வெளியேறி விவசாயம் பாதிக்கப்படுவதால் சிங்கநாதபுரம் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காரியாபட்டி சூரனூர் சிங்கநாதபுரத்தில் யூனியனுக்கு சொந்தமான கண்மாய், 85 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 200க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. சூரனூர் பெரிய கண்மாய், குண்டுகுளம், கம்பாளி கண்மாய் நிறைந்து உபரி நீர் சிங்கநாதபுரம் கண்மாய்க்கு வரும். இக்கண்மாய் துார்வாரி 30 ஆண்டுகளாச்சு.
வரத்துக் கால்வாய்கள் துார்ந்து போனதால் இக்கண்மாய்க்கு வரும் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. அதிக மழை பெய்து, அப்படியே கண்மாய்க்கு தண்ணீர் வந்தாலும் சேதம் அடைந்த கரைகளால் தாக்குப் பிடிக்க முடியாமல் கரை உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி விடுகிறது. அடிக்கடி கரை உடைவது தொடர் கதையாக இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து கண்மாய் இருக்கும் அடையாளமே தெரியாமல் போயின. நெல் விவசாயம் செய்ய விவசாயிகள் ஆர்வமாக இருக்கின்றனர். கண்மாயை சீரமைக்காததால் மழை நீரை தேக்க முடியாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கண்மாயை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.