/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காதல் மனைவி தற்கொலை கணவருக்கு 7 ஆண்டு சிறை காதல் மனைவி தற்கொலை கணவருக்கு 7 ஆண்டு சிறை
காதல் மனைவி தற்கொலை கணவருக்கு 7 ஆண்டு சிறை
காதல் மனைவி தற்கொலை கணவருக்கு 7 ஆண்டு சிறை
காதல் மனைவி தற்கொலை கணவருக்கு 7 ஆண்டு சிறை
ADDED : ஜூன் 20, 2024 04:17 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் அருகே காதல் மனைவி முனீஸ்வரி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அவரது கணவர் முத்து மணிகண்டனுக்கு, 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
விருதுநகர் மாணிக்கம் நகரைச் சேர்ந்தவர் முத்து மணிகண்டன், 30, பூக்கடை நடத்தி வந்தார். இவர் எட்ட நாயக்கன்பட்டியைச் சேர்ந்த, பி.இ. படித்த முனீஸ்வரி, 27, என்பவரை, 2014ல் காதலித்து திருமணம் செய்துள்ளார். இத்தம்பதிக்கு நான்கு வயது மகன் உள்ளான்.
இந்நிலையில் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மன வேதனை அடைந்த முனீஸ்வரி, 2019 ஆக. 8 இரவு, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர் மேற்கு போலீசார் முத்துமணிகண்டனை கைது செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில் முத்து மணிகண்டனுக்கு 7 ஆண்டு சிறை, ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜான்சி ஆஜரானார்.