/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தமிழகத்தில் முன்னேறத் துடிக்கும் 16 வட்டாரங்களில் சம்பூர்ணதா அபியான் திட்டத்தில் வளர்ச்சி பணிகள் துவக்கம் தமிழகத்தில் முன்னேறத் துடிக்கும் 16 வட்டாரங்களில் சம்பூர்ணதா அபியான் திட்டத்தில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
தமிழகத்தில் முன்னேறத் துடிக்கும் 16 வட்டாரங்களில் சம்பூர்ணதா அபியான் திட்டத்தில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
தமிழகத்தில் முன்னேறத் துடிக்கும் 16 வட்டாரங்களில் சம்பூர்ணதா அபியான் திட்டத்தில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
தமிழகத்தில் முன்னேறத் துடிக்கும் 16 வட்டாரங்களில் சம்பூர்ணதா அபியான் திட்டத்தில் வளர்ச்சி பணிகள் துவக்கம்
ADDED : ஜூலை 10, 2024 11:32 PM
விருதுநகர்:தமிழகத்தில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு சார்பில் 16 முன்னேறத் துடிக்கும் வட்டாரங்களில் முதற்கட்டமாக சம்பூர்ணதா அபியான் திட்டத்தின் கீழ் 6 குறியீடுகளில் வளர்ச்சி பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு சார்பில் 112 பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டதில் தமிழகத்தில் ராமநாதபுரமும் விருதுநகரும் உண்டு. 81 குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு, இலக்குகளை நிறைவேற்ற 2018 முதல் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து தற்போது தேசிய அளவில் 500 பின்தங்கிய வட்டாரங்கள் நிதி ஆயோக் அமைப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, அதில் தமிழகத்தில் கள்ளக்குறிச்சி கல்வராயன் மலை, கரூர் தோகைமலை, பெரம்பலுார் ஆலத்துார், புதுக்கோட்டை திருவரங்குளம், ராமநாதபுரம் திருவாடனை, ராணிப்பேட்டை திமிரி, சிவகங்கை திருப்புத்துார், நீலகிரி கோத்தகிரி, தென்காசி மேலநீலிதநல்லுார், திருவண்ணாமலை ஜவ்வாதுமலை, திருச்சிராப்பள்ளி துறையூர், திருநெல்வேலி நாங்குநேரி, வேலுார் கே.வி.குப்பம், விழுப்புரம் திருவெண்ணைநல்லுார், விருதுநகர் திருச்சுழி ஆகிய 16 வட்டாரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
சுகாதாரம், ஊட்டச்சத்து 14, கல்வி 11, விவசாயம் 5, அடிப்படை உட்கட்டமைப்பு 5, சமூக மேம்பாடு 4 என 39 குறியீடுகளை கொண்டு கண்காணிக்கப்படுகிறது.
இதில் முதற்கட்டமாக சம்பூர்ணதா அபியான் திட்டத்தின் கீழ் மருத்துவத்தில் கர்ப்பிணிகளின் முதல் மூன்று மாதங்களில் பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு, மக்களுக்கு ரத்த அழுத்தம், நீரிழிவு பரிசோதனைகளை நடத்தி கண்காணிப்பது, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து எடுத்து கொள்வதை அதிகரிப்பது, மண் மாதிரி சேகரித்து அதற்கேற்ப பயிரிட்டு மகசூலை அதிகரிப்பது, சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கி தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவது ஆகிய 6 குறியீடுகள் ஜூலை முதல் செப்டம்பர் வரை நாறு சதவீதம் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான வளர்ச்சி பணிகள் 16 வட்டாரங்களிலும் துவங்கப்பட்டுள்ளது.