/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போக்குவரத்திற்கு இடையூறான பறிமுதல் வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறான பறிமுதல் வாகனங்கள்
போக்குவரத்திற்கு இடையூறான பறிமுதல் வாகனங்கள்
போக்குவரத்திற்கு இடையூறான பறிமுதல் வாகனங்கள்
போக்குவரத்திற்கு இடையூறான பறிமுதல் வாகனங்கள்
ADDED : ஜூன் 20, 2024 04:23 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் முன் அதனை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் சர்ச் சந்திப்பில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை உள்ள ரோடு, போக்குவரத்து நெருக்கடி உள்ள ரோடாக உள்ளது. இதன் வழியாக தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு மருத்துவமனைக்கு வரும் முதியவர்கள், கர்ப்பிணிகள் நடந்து செல்கின்றனர். இதனால் இந்த பாதையை போலீசார் ஒரு வழி பாதையாக மாற்றினர்.
பல்வேறு கனிம வள திருட்டு சம்பவங்களில் பிடிபட்ட ஜே.சி.பி, டிப்பர் லாரி போன்ற கனரக வாகனங்களை பறிமுதல் செய்த டவுன் போலீசார் அதனை நிறுத்துவதற்கு இடம் இல்லாததால் ஸ்டேஷன் வாசலில் உள்ள மெயின் ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்தி உள்ளனர்.
இதனால் வேகமாக வரும் டூவீலர்கள், ஆட்டோ, பஸ், கார் போன்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மீது மோதும் அபாயம் உள்ளது. பல சமயங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் கூட வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
எனவே, போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ள ரோட்டில் நிறுத்தப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.