/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ முகமூடி கொள்ளையில் 8 பேர் கைது ரூ.4.80 கோடி சொத்துகள் பறிமுதல் 150 பவுன் நகைகள் மீட்பு முகமூடி கொள்ளையில் 8 பேர் கைது ரூ.4.80 கோடி சொத்துகள் பறிமுதல் 150 பவுன் நகைகள் மீட்பு
முகமூடி கொள்ளையில் 8 பேர் கைது ரூ.4.80 கோடி சொத்துகள் பறிமுதல் 150 பவுன் நகைகள் மீட்பு
முகமூடி கொள்ளையில் 8 பேர் கைது ரூ.4.80 கோடி சொத்துகள் பறிமுதல் 150 பவுன் நகைகள் மீட்பு
முகமூடி கொள்ளையில் 8 பேர் கைது ரூ.4.80 கோடி சொத்துகள் பறிமுதல் 150 பவுன் நகைகள் மீட்பு
ADDED : ஜூன் 21, 2024 02:24 AM
ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் உள்ளிட்ட பல இடங்களில் முகமூடி கொள்ளையில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 150 பவுன் நகைகள் மீட்கப்பட்டன. ரூ.4.84 கோடியிலான திருட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராஜபாளையம் தெற்கு ஆண்டாள்புரத்தில் முருகானந்தம் என்பவர் வீட்டில் பிப் 24 ல் குடும்பத்தினரை கட்டிப்போட்டு 56 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்தது தொடர்பாக தனிப்படையினர் விசாரணை செய்து வந்தனர்.
இதுதொடர்பாக ராஜபாளையம் புது பஸ்ஸ்டாண்ட் அருகே பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த சுரேஷ்குமார் 27, அருண்குமாரை 27, பிடித்து போலீசார் விசாரித்தனர்.
இவர்கள் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி 35, தலைமையில் மேலும் ஐந்து நபர்களுடன் சேர்ந்து 2021 முதல் பல்வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.
இவர்கள் கொள்ளையடித்த பொருட்களை மறைப்பதற்கும், விற்று வேறு சொத்துக்களை வாங்கவும் லட்சுமி, அனிதா பிரியா, நாகஜோதி, சீனித்தாய், மோகன், மகாலட்சுமி உதவியாக இருந்ததும் தெரிய வந்தது.
இவர்களிடம் இருந்து ரூ. 75 லட்சம் மதிப்புள்ள 150 பவுன் தங்க நகைகள், ரூ. 2.5 லட்சம், 3 லேப்டாப், 3 டேப்லட், 3 அலைபேசி, கொள்ளையடித்த நகைகளை விற்று ராஜபாளையத்தில் வாங்கிய ரூ. 4 கோடி மதிப்புள்ள காட்டன் மில் தொடர்பான ஆவணம் என ரூ.4.84 கோடி மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தலைமறைவான மூர்த்தி உள்ளிட்ட மேலும் 5 பேரை தனிப்படையினர் தேடி வருகின்றனர். மூகமூடி கொள்ளை வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்த தனிப்படை போலீசாரை எஸ்.பி., பெரோஸ்கான் பாராட்டினார்.