/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஓசூர் - வத்திராயிருப்பு 100 கிலோ குட்கா பறிமுதல் ; 4 பேர் கைது ஓசூர் - வத்திராயிருப்பு 100 கிலோ குட்கா பறிமுதல் ; 4 பேர் கைது
ஓசூர் - வத்திராயிருப்பு 100 கிலோ குட்கா பறிமுதல் ; 4 பேர் கைது
ஓசூர் - வத்திராயிருப்பு 100 கிலோ குட்கா பறிமுதல் ; 4 பேர் கைது
ஓசூர் - வத்திராயிருப்பு 100 கிலோ குட்கா பறிமுதல் ; 4 பேர் கைது
ADDED : ஜூன் 17, 2024 12:13 AM

வத்திராயிருப்பு : ஓசூரில் இருந்து வத்திராயிருப்பிற்கு கடத்தி கொண்டு வரப்பட்ட 100 கிலோ எடையுள்ள குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வத்திராயிருப்பு, கூமாபட்டி, நத்தம்பட்டி பகுதிகளில் அதிகளவில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்நிலையில் நேற்று அதிகாலை பேரையூரில் இருந்து வத்திராயிருப்பிற்கு வந்த ஆட்டோவை, மகாராஜபுரம் மின் வாரிய அலுவலகம் அருகில் நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 6 மூடைகளில் 86 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
போலீசார் விசாரணையில், ஓசூரில் இருந்து வத்திராயிருப்பில் விற்பனை செய்ய கடத்திக் கொண்டு வந்தது தெரிந்தது.
இதனையடுத்து ஓசூர் ராஜீவ் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் 51, பேரையூர் சுப்புலாபுரத்தை சேர்ந்த ஹரிஹரன் 25, கூமாப்பட்டி ராமசாமியாபுரத்தை சேர்ந்த திலீபன் ராஜா 26, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடத்தலில் ஈடுபட்ட ஒரு ஆட்டோ, டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் தம்பிபட்டி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த முகமது அஸ்லம் 25, என்பவர் டூவீலரில் விற்பனைக்கு கொண்டு வந்த 16 கிலோ குட்கா புகையிலை பொருட்களையும், டூவீலரையும் போலீசார் பறிமுதல் செய்து, முகமது அஸ்லாமை கைது செய்தனர்.