/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குடிநீர் திட்டத்திற்கு தோண்டிய பள்ளம்; அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப தயக்கம் குடிநீர் திட்டத்திற்கு தோண்டிய பள்ளம்; அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப தயக்கம்
குடிநீர் திட்டத்திற்கு தோண்டிய பள்ளம்; அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப தயக்கம்
குடிநீர் திட்டத்திற்கு தோண்டிய பள்ளம்; அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப தயக்கம்
குடிநீர் திட்டத்திற்கு தோண்டிய பள்ளம்; அங்கன்வாடிக்கு குழந்தைகளை அனுப்ப தயக்கம்
ADDED : ஜூன் 17, 2024 12:12 AM

திருச்சுழி : திருச்சுழி அருகே கத்தாளம்பட்டியில் அங்கன்வாடி கட்டடத்திற்கு அருகில் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தொட்டி கட்டாமல் பணியை பாதியில் நிறுத்தியதால் அதில் குழந்தைகள் விழுந்து விடுமோ என அச்சத்தில் பெற்றோர் உள்ளனர்.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கத்தாளம்பட்டி. இங்குள்ள மாரியம்மன் கோயில் அருகில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் 40 குழந்தைகள் படித்து வருகின்றனர். 4 மாதங்களுக்கு முன்பு மையம் அருகே தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தரை தளத்தில் தொட்டி கட்டுவதற்கு மெகா பள்ளம் தோண்டப்பட்டது.
பள்ளம் தோண்டப்பட்டதுடன் பணிகள் எதுவும் நடக்கவில்லை. மையத்தில் பயிலும் குழந்தைகள் வெளியில் விளையாடும் பொழுது தவறி பள்ளத்திற்குள் விழக்கூடிய ஆபத்து உள்ளது. இதனால் பெற்றோர் அங்கன்வாடி மையத்திற்கு குழந்தைகளை அனுப்ப தயங்கி வருகின்றனர்.
மேலும் கால்நடைகளும் இந்த பகுதி வழியாக வருவதால் அவையும் விழுந்து விடக்கூடிய வாய்ப்பு உள்ளது.
தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகளை விரைந்து செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளத்தை சுற்றி பாதுகாப்பாக வேலி அமைத்து பணிகளை செய்ய வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.