/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நரிக்குடியில் கஞ்சா விற்பனை அமோகம் நரிக்குடியில் கஞ்சா விற்பனை அமோகம்
நரிக்குடியில் கஞ்சா விற்பனை அமோகம்
நரிக்குடியில் கஞ்சா விற்பனை அமோகம்
நரிக்குடியில் கஞ்சா விற்பனை அமோகம்
ADDED : ஜூன் 23, 2024 03:19 AM
நரிக்குடி: நரிக்குடி பகுதியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடையில் அதிக பணம் கொடுத்து மது பாட்டில் வாங்க முடியாத இளைஞர்கள் உட்பட பலர், கஞ்சா போதைக்கு அடிமையாகி உள்ளனர்.
இதையடுத்து அதிக அளவில் கிராக்கி இருந்து வருகிறது. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து கஞ்சா வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். எந்த நேரமும் கஞ்சா கிடைப்பதால், போதையில் சுற்றித் திரிகின்றனர். இதனால் பல்வேறு பிரச்னைகள், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசார் சோதனை செய்யும் போது கண்ணில் மண்ணை தூவி கஞ்சா விற்பனையை அமோகமாக நடத்தி வருகின்றனர்.
இளைஞர்கள் உட்பட பலரும் பாதிக்கப்பட்டு வருவதால் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.