/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தி.மு.க.,அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பா.ஜ.,வினர் கைது தி.மு.க.,அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பா.ஜ.,வினர் கைது
தி.மு.க.,அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பா.ஜ.,வினர் கைது
தி.மு.க.,அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பா.ஜ.,வினர் கைது
தி.மு.க.,அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற பா.ஜ.,வினர் கைது
ADDED : ஜூன் 23, 2024 03:20 AM

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலிகளை தடுக்க தவறிய தி.மு.க., அரசை கண்டித்து பா.ஜ., சார்பில் ஆர்பாட்டம் செய்ய முயன்ற 101பேரை போலீசார் கைதுசெய்தனர்.
விருதுநகர் பா.ஜ., சார்பில் தேசபந்து மைதானத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பா.ஜ.,வினருக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து 29 பா.ஜ., வினரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். நீதிமன்ற வழிகாட்டுதலோடு மற்றொரு நாள் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சியினருக்கு கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் தெரிவித்துள்ளார்.
* சிவகாசி பஸ் ஸ்டாண்ட் முன்பு மேற்கு மாவட்டத் தலைவர் சரவணதுரைராஜா தலைமையில் லோக்சபா தேர்தல் பார்வையாளர் வெற்றிவேல், பொதுச் செயலாளர்கள் தங்கராஜ், போத்திராஜ், மாவட்ட செயலாளர்கள் நாகலிங்கம், கலையரசன், நகர தலைவர்கள் பழனிச்சாமி, முருகேசன், ஒன்றிய தலைவர் சிவ செல்வராஜ், ஒன்றிய செயலாளர் சீனிவாசன், கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். இதில் 72 பேரை போலீசார் கைதுசெய்தனர்.