/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை வழிபாடு இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை வழிபாடு
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை வழிபாடு
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை வழிபாடு
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமை வழிபாடு
ADDED : ஜூலை 20, 2024 12:19 AM

சாத்துார் : இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடிமாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலை 5:30 மணிக்கு மாரியம்மன்னுக்கு பால், பன்னீர், இளநீர், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால்சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் அம்மனுக்கு முடி காணிக்கை செலுத்தியும், பொங்கல் வைத்தும் கை, கால், கண்மலர் செலுத்தியும் தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றினர். அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தபக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி மற்றும் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் செய்துஇருந்தனர்.