வகுப்பறை கட்டடம் சேதத்தால் அச்சம்
வகுப்பறை கட்டடம் சேதத்தால் அச்சம்
வகுப்பறை கட்டடம் சேதத்தால் அச்சம்
ADDED : ஜூலை 14, 2024 05:13 AM

சிவகாசி, : சிவகாசி ஏ.வி.டி. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சேதம் அடைந்துள்ள கட்டடத்தால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகாசி மணி நகர் முக்கில் உள்ள ஏ.வி.டி. மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள பழைய வகுப்பறை கட்டடம் ஒன்று சேதம் அடைந்துள்ளது.
இக்கட்டத்தில் துருப்பிடித்த கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் அவ்வப்போது சிமெண்ட் பெயர்ந்து விழுகிறது. மாணவர்கள் விபரீதம் அறியாமல் சேதம் அடைந்த கட்டடம் அருகே நடமாடுகின்றனர். மாணவர்கள் நடமாடும் போது கட்டடம் இடிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆசிரியர்களுக்கும் இதே நிலைதான். எனவே இங்கு சேதம் அடைந்த கட்டடத்தை உடனடியாக சீரமைக்க வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.