Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சாத்துார் அரசு மருத்துவமனையில் மனநல ஆலோசனை மையம் அமைக்க எதிர்பார்ப்பு

சாத்துார் அரசு மருத்துவமனையில் மனநல ஆலோசனை மையம் அமைக்க எதிர்பார்ப்பு

சாத்துார் அரசு மருத்துவமனையில் மனநல ஆலோசனை மையம் அமைக்க எதிர்பார்ப்பு

சாத்துார் அரசு மருத்துவமனையில் மனநல ஆலோசனை மையம் அமைக்க எதிர்பார்ப்பு

ADDED : மார் 12, 2025 06:32 AM


Google News
சாத்துார்; சாத்துார் அரசு மருத்துவமனையில் மனநல ஆலோசனை மையம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாத்துார், சுற்றுக் கிராமங்களில் வசிக்கும் பலர் சமீப காலங்களில் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. துாக்கிட்டும், விஷம் குடித்தும் முதியவர்களும் வாலிபர்களும் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாக உள்ளது.

தீராத வயிற்று வலி மற்றும் மது பழக்கம் குடும்பப் பிரச்னை காரணமாகவும், ஆண் மற்றும் பெண், முதியவர்கள் என தற்கொலை செய்து கொள்ளும் செய்தி அடிக்கடி வரும் நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மதுவால் உடல் நலப்பிரச்னைக்கும் குடும்பப் பிரச்னைக்கும் ஆளாகி தவிப்பவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

மனநிலை பாதித்த நிலையில் தனிமையில் வசிக்கும் ஆதரவற்றோரும் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாக உள்ளது.பெரும்பாலும் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிலே தற்கொலை முடிவை நோக்கி செல்கின்றனர். இதன் காரணமாக அவர்களின் குடும்பத்தினரும் உறவினர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி அவதிப்படும் நிலை உள்ளது.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மனநல ஆலோசனைகளை வழங்கி பிரச்னைகளை எதிர்கொள்வதற்கான மன பலத்தை ஏற்படுத்திட அரசு மருத்துவமனையில் மனநல ஆலோசனை மையம் ஏற்படுத்திட வேண்டும் என சாத்துார் பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் மக்களிடம் தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்திடவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us