ADDED : மார் 12, 2025 06:32 AM
விருதுநகர்; விருதுநகரில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கிழக்கு மாவட்டச் செயலாளர் செல்வம் தலைமையில் மகளிர் அணியினரின் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
இதில் சட்டசபை தொகுதி பெண்கள் பொறுப்பாளர் தனுஷ்மதி உள்பட பலர் பங்கேற்றனர். இதில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.