/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ காந்திநகர் சந்திப்பில் ரோடு, ஓடை ஆக்கிரமிப்பு காந்திநகர் சந்திப்பில் ரோடு, ஓடை ஆக்கிரமிப்பு
காந்திநகர் சந்திப்பில் ரோடு, ஓடை ஆக்கிரமிப்பு
காந்திநகர் சந்திப்பில் ரோடு, ஓடை ஆக்கிரமிப்பு
காந்திநகர் சந்திப்பில் ரோடு, ஓடை ஆக்கிரமிப்பு
ADDED : ஜூன் 09, 2024 03:01 AM

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டை காந்தி நகர் சந்திப்பில் உள்ள ரோடுகள், ஓடை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழை பெய்தால் வெள்ளம் வெளியேற முடியாமல் காந்திநகர் சந்திப்பின் தேங்கி போக்குவரத்திற்கும் பொது மக்களுக்கும் இடைஞ்சலாக உள்ளது.
அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் பகுதியில் காந்திநகர் சந்திப்பு உள்ளது. இங்கே நகராட்சி மினி பஸ் ஸ்டாண்ட் உள்ளது. மதுரை, தூத்துக்குடி செல்ல இங்கிருந்து தான் பஸ் ஏற வேண்டும். ஜவுளி கடைகள், வங்கிகள், ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரி என ஏராளமான நிறுவனங்கள் இங்கு உள்ளன. இந்த பகுதி வழியாக செல்லும் ரோடு அகலமாக இருந்தது.
நாளடைவில் சிறிது சிறிதாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. ரோட்டின் ஓரங்களில் உள்ள மழைநீர் வரத்து ஓடை ஆக்கிரமிப்பால் அடைபட்டுள்ளது. இதனால் மழைக்காலத்தில் மழை நீர் வெளியேற வழி இன்றி காந்தி நகர் பகுதி முழுவதும் வெள்ளைக்காடாக மாறிவிடுகிறது.
இதனால் போக்குவரத்தும் பொதுமக்களுக்கும் இடைஞ்சலாக உள்ளது. ரோட்டின் இருபுறமும் கல் பட்டறைகள், மற்ற கடைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தவும், ஓடைகளை தூர்வாரி சரி செய்யவும் நெடுஞ்சாலை துறையினர் அக்கறை காட்டுவது இல்லை. மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் ஓடையை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.