ADDED : ஜூலை 25, 2024 11:59 PM
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அர்ஜுனன், நகர செயலாளர் மாரியப்பன் விளக்கி பேசினர். கணேசன் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதி படி மாதாந்திர மின் அளவீடு கணக்கிட வேண்டும். புதிய மின் உற்பத்தி திட்டங்களை துவக்கிடவும், தனியார் மய நடவடிக்கைகளை கைவிட வலியுறுத்தியும், உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வினை திரும்ப பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.