ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் அரசாணை 243ஐ ரத்து செய்ய கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று மாலை ஸ்ரீவில்லிபுத்துார் நகர் மன்ற திரு.வி.க. மேல்நிலைப்பள்ளி முன்பு நடந்தது.
சங்க நிர்வாகி அய்யனார் வரவேற்றார். செயலாளர் உத்தண்ட சீனிவாசன் தலைமை வகித்தார், வட்டார நிர்வாகிகள் பிரகாஷ், கருப்பசாமி, ஆண்டாள் பேசினர்.