
விருதுநகர்: விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் 103 மாத டி.ஏ., உயர்வை வழங்குதல், உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மண்டலத் தலைவர் தங்கப்பழம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் மண்டல பொதுச்செயலாளர் போஸ், உதவித் தலைவர் வேலுச்சாமி உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.