/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மழைநீர் கால்வாயில் கழிவுநீரை குடிக்கும் கால்நடைகள் இறப்பு மழைநீர் கால்வாயில் கழிவுநீரை குடிக்கும் கால்நடைகள் இறப்பு
மழைநீர் கால்வாயில் கழிவுநீரை குடிக்கும் கால்நடைகள் இறப்பு
மழைநீர் கால்வாயில் கழிவுநீரை குடிக்கும் கால்நடைகள் இறப்பு
மழைநீர் கால்வாயில் கழிவுநீரை குடிக்கும் கால்நடைகள் இறப்பு
ADDED : ஜூன் 20, 2024 04:11 AM
அருப்புக்கோட்டை: மழைநீர் வரத்து கால்வாயில் கழிவு நீரை விடுவதால் இந்த தண்ணீரை குடிக்கும் கால்நடைகள் இறந்து விடுவதாக குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் புகார் கூறினர்.
அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., வள்ளிக்கன்ணு தலைமை வகித்தார். அருப்புக்கோட்டை, திருச்சுழி, நரிக்குடி, காரியாபட்டி தாசில்தார்கள், பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:
காவிரி, வைகை. குண்டாறு பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராம் பாண்டியன்:
காரியாபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவு நீரை தோப்பூர் கண்மாய்க்கு செல்லும் மழை நீர் வரத்து கால்வாயை 3 பகுதியாக பிரித்து அதில் அந்தப் பகுதி வீடுகளின் கழிவு நீரை விடுகின்றனர். இதனால் விவசாயத்திற்கு இந்த தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. கழிவுநீரை குடிப்பதால் கால்நடைகள் இறந்து விடுகின்றன.
செல்வம், கஞ்சம்பட்டி: கஞ்சம்பட்டி கண்மாயின் மதகு அணை உடைந்து உள்ளது. இதை சரி செய்ய வேண்டும்.
சிவசாமி, முடுக்கன்குளம்: ஆலங்குளத்தில் இருந்து முடுக்கன்குளம் கண்மாய் வரை தூர்வார வேண்டும்.
விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இனி வரும் கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.