/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ரயில் சரக்குகளை லாரிகளில் ஏற்றும் பகுதியில் ரோடு சேதம் ரயில் சரக்குகளை லாரிகளில் ஏற்றும் பகுதியில் ரோடு சேதம்
ரயில் சரக்குகளை லாரிகளில் ஏற்றும் பகுதியில் ரோடு சேதம்
ரயில் சரக்குகளை லாரிகளில் ஏற்றும் பகுதியில் ரோடு சேதம்
ரயில் சரக்குகளை லாரிகளில் ஏற்றும் பகுதியில் ரோடு சேதம்
ADDED : ஜூலை 16, 2024 05:04 AM

விருதுநகர் : விருதுநகரில் ரயில்களில் வரும் சரக்குகளை லாரிகளில் ஏற்றுவதற்காக அமைக்கப்பட்ட ரோடு முழுவதும் சேதமாகியுள்ளது.
விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் ரயிலில் வரும் சரக்குகளை லாரிகளில் ஏற்றுவதற்கு ஏதுவாக ரோடு அமைக்கப்பட்டது. இதனால் லாரிகள் சிரமமின்றி எளிதாக வந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்றது. ஆனால் தற்போது ரோடு முழுவதும் சேதமாகி ரோடு இருந்த தடம் தெரியாமல் மண்ரோடாக மாறியுள்ளது.
மேலும் மழையில் ரோடு முழுவதும் சேறும், சகதியுமாக இருப்பதால் சரக்குகளை ஏற்றுவதற்காக வரும் லாரிகள் திரும்ப செல்லும் போது சேற்றில் சிக்கி மாட்டிக்கொள்ளும் சம்பவங்களும் நடக்கிறது. இது போன்ற சமயத்தில் பின்னால் வரும் லாரிகள் தொடர்ந்து முன்னோக்கி செல்ல முடியாமல் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
சரக்குகளை ஏற்றுவதிலும் தாமதம் ஏற்பட்டு ரயில் புறப்பட காலதாமதம் உண்டாகிறது. எனவே விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் சரக்குகளை லாரியில் ஏற்றும் பகுதியில் சேதமாகியுள்ள ரோடு முழுவதையும் சீரமைக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.