/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வத்திராயிருப்பு, காரியாபட்டியில் நீதிமன்றங்கள் விரைவில் திறப்பு வத்திராயிருப்பு, காரியாபட்டியில் நீதிமன்றங்கள் விரைவில் திறப்பு
வத்திராயிருப்பு, காரியாபட்டியில் நீதிமன்றங்கள் விரைவில் திறப்பு
வத்திராயிருப்பு, காரியாபட்டியில் நீதிமன்றங்கள் விரைவில் திறப்பு
வத்திராயிருப்பு, காரியாபட்டியில் நீதிமன்றங்கள் விரைவில் திறப்பு
ADDED : ஜூன் 26, 2024 07:40 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: வத்திராயிருப்பு, காரியாபட்டியில் மாவட்ட முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களும், அருப்புக்கோட்டையில் புதிதாக கூடுதல் மாவட்ட நீதிமன்றமும், ராஜபாளையத்தில் சார்பு நீதிமன்றமும் விரைவில் திறக்கப்பட உள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிமன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம், விரைவு மகளிர் நீதிமன்றம், போக்சோ நீதிமன்றம், தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் போன்ற மாவட்ட அளவிலான நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது.
இங்கு மாவட்டத்தில் அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவாகும் முக்கிய வழக்குகளின் விசாரணை நடந்து வருகிறது.
இதில் வத்திராயிருப்பு தாலுகாவில் உள்ள கிருஷ்ணன் கோவில், நத்தம்பட்டி, வத்திராயிருப்பு, கூமாபட்டி ஆகிய நான்கு போலீஸ் ஸ்டேஷனில் பதிவாகும் வழக்குகள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்.1ல் நடந்து வருகிறது.
வத்திராயிருப்பு தனித்தாலுகாவாக உருவாக்கப்பட்ட பிறகு அங்கு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உருவாக்க அரசு உத்தரவிட்டது.
இதற்காக வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பின்புறம் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிகமாக நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த கட்டடம் சீரமைக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது.
இதுபோல் காரியாபட்டிலும் மாவட்ட முன்சீப் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் துவக்கப்பட உள்ளது.
இவ்விரு நீதிமன்றங்களும் எப்போது திறக்கப்படும் என வத்திராயிருப்பு காரியாபட்டி மக்கள் எதிர்பார்த்து வந்தனர்.
மேலும் அருப்புக்கோட்டையில் புதிதாக கூடுதல் மாவட்ட நீதிமன்றமும், ராஜபாளையத்தில் சார்பு நீதிமன்றமும் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நான்கு நீதிமன்றங்களும் ஜூலை மாத இறுதிக்குள் திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.