/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ செங்கமல நாச்சியார்புரத்தில் ஆக்கிரமிப்பால் அவதி செங்கமல நாச்சியார்புரத்தில் ஆக்கிரமிப்பால் அவதி
செங்கமல நாச்சியார்புரத்தில் ஆக்கிரமிப்பால் அவதி
செங்கமல நாச்சியார்புரத்தில் ஆக்கிரமிப்பால் அவதி
செங்கமல நாச்சியார்புரத்தில் ஆக்கிரமிப்பால் அவதி
ADDED : மார் 15, 2025 05:01 AM
சிவகாசி: சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரத்தில் மெயின் ரோடுகளில் ஆக்கிரமிப்பு உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
சிவகாசி அருகே செங்கமல நாச்சியார் புரத்தில் திருத்தங்கல் ரோடு சிவகாசி ரோடு பழைய வெள்ளையாபுரம் ரோடு என மூன்று சந்திப்பு உள்ளது.
இந்த மூன்று ரோடுகளிலும் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் உள்ளது.
சிவகாசி சாட்சியாபுரத்தில் ரயில்வே மேம்பால பணிகள் நடந்து வரும் நிலையில் செங்கமல நாச்சியார்புரம் ரோடு முக்கிய மாற்றுப் பாதையாக உள்ளது இந்த ரோட்டில்அனைத்து வாகனங்களும் சென்று வருகின்றன. இயல்பாகவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ள நிலையில், தற்போது அதிக அளவில் வாகனங்கள் வந்து செல்கின்றன.
இந்நிலையில் இங்கு ஆக்கிரமிப்பினால் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. மேலும் வளைவுப் பகுதி வேறு என்பதால் எளிதில் வாகனங்கள் விலகிச் செல்ல முடியவில்லை.
எனவே இப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரான போக்குவரத்திற்கு வழி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.