ADDED : ஜூலை 28, 2024 04:07 AM
நரிக்குடி, : நரிக்குடி ஆவரங்குளத்தைச் சேர்ந்த மணிக்கண்ணன் 41, அழகேசன் 47. இருவரும் உறவினர்கள். இவர்களுக்குள் சொத்து பிரிப்பது தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது.
அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று முன் தினம் ஒருவருக்கொருவர் இரும்பு ராடால் தாக்கி கொண்டனர். அழகேசன் மீதும், மணிக்கண்ணன், ருக்குமணி, நிர்மலா மீதும் அ. முக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.