ADDED : ஜூலை 22, 2024 04:20 AM
விருதுநகர்: தோட்டக்கலை துணை இயக்குனர் சுபா வாசுகி செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 2024-25ம் ஆண்டிற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காரீப் பருவத்தில் வாழை பயிருக்குசிவகாசி மங்கலம், திருத்தங்கல் குறுவட்டங்கள், வத்திராயிருப்பில் நத்தம்பட்டி, வெங்காயம் பயிருக்கு காரியாபட்டி, முடுக்கன்குளம், ஸ்ரீவில்லிபுத்துாரில் மல்லி ஆகிய பகுதிகளில் பயிர் காப்பீடு செய்யப்படும்.
இத்திட்டத்தின் கீழ் காரீப் பருவத்தில் பிரிமீயம் தொகையாக ஒரு ஏக்கருக்கு வாழை பயிருக்கு ரூ.3404, வெங்காய பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.1744 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய கடைசி நாளாக வெங்காய பயிருக்கு ஆக. 31, வாழைக்கு செப். 16 என அறிவிக்கப்பட்டுள்ளது. பேரிடரால் ஏற்படும் இழப்பை தடுக்க காப்பீடு செய்து பயன்பெறலாம், என்றார்.