/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ அருப்புக்கோட்டையில் பட்டா மாற்றும் முகாம் அருப்புக்கோட்டையில் பட்டா மாற்றும் முகாம்
அருப்புக்கோட்டையில் பட்டா மாற்றும் முகாம்
அருப்புக்கோட்டையில் பட்டா மாற்றும் முகாம்
அருப்புக்கோட்டையில் பட்டா மாற்றும் முகாம்
ADDED : ஜூன் 07, 2024 04:47 AM
விருதுநகர்: அருப்புக்கோட்டை நகரில் வார்டு இ பிளாக் 5 உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள நகர நில அளவை புலங்களுக்கு நகர வரி திட்டத்தின் கீழ் வருவாய் பின் தொடர் பணியாக பட்டா மாற்றும் முகாம் நடந்து வருகிறது.
இது தொடர்பான மாவட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பு: மக்கள் தங்களது நில ஆவணங்களை எளிதில் எங்கிருந்தும் உடனடியாக பெற்றுக் கொள்ள ஏதுவாக ஆன்லைன் பட்டா திட்டம் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது அருப்புக்கோட்டை நகர நில அளவைக்குட்பட்ட வார்டு இ பிளாக் 5 உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள நகர நில அளவை புலங்களுக்கு நகர நிலவரித்திட்டத்தின் கீழ் வருவாய் பின் தொடர் பணி நடந்து வருகிறது. மக்கள் தங்கள் கிரைய ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட வீட்டு மனைகளுக்கு கூட்டுப்பட்டாவில் இருந்து தனிப்பட்டா பெறவும், பாகவிஸ்திர பத்திரங்கள் அடிப்படையில் தனிப்பட்டா பெறவும், கிரையம் பெற்றது முதற்கொண்டு நாளது தேதி வரை பட்டாமாற்றம் செய்யாமல் இருப்பின், பட்டா பெறவும், தங்களிடம் உள்ள பதிவு செய்யப்பட்ட பத்திர ஆவணங்களின் நகல்களுடன் அருப்புக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம், என்றார்.