/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மாவட்டத்தில் கந்துவட்டி கும்பலால் 13 நாட்களில் 7 பேர் தற்கொலை மாவட்டத்தில் கந்துவட்டி கும்பலால் 13 நாட்களில் 7 பேர் தற்கொலை
மாவட்டத்தில் கந்துவட்டி கும்பலால் 13 நாட்களில் 7 பேர் தற்கொலை
மாவட்டத்தில் கந்துவட்டி கும்பலால் 13 நாட்களில் 7 பேர் தற்கொலை
மாவட்டத்தில் கந்துவட்டி கும்பலால் 13 நாட்களில் 7 பேர் தற்கொலை
ADDED : ஜூன் 07, 2024 04:48 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடன் பிரச்னையால் மகன், மகள், பேத்தியை கொலை செய்து ஆசிரியர் தம்பதி மே 22ல் தற்கொலை செய்தனர். அதே போல பாறைப்பட்டியில் ஜூன் 4 இரவில் கடன் பிரச்னையால் தாய், மகள் தற்கொலை செய்தனர். மாவட்டத்தில் கந்துவட்டி கும்பல் தொல்லையால் 13 நாள்களில் 7 பேர் தற்கொலை செய்து கொண்டது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் பாலாஜி நகரைச் சேர்ந்த ஆசிரியர் தம்பதி லிங்கம் 47, பழனியம்மாள் 45. இவர்களின் மகள் ஆனந்தவள்ளி, 27, மகன் ஆதித்யா 14. ஆனந்த வள்ளிக்கு திருமணமாகி சஷ்டிகா என்ற 2 மாத குழந்தை இருந்தது.
இந்நிலையில் கடன் பிரச்னையால் மே 22 ல் ஆனந்தவள்ளி, ஆதித்யா, பேத்தி சஷ்டிகாவுக்கு விஷம் கொடுத்து லிங்கம், பழனியம்மாள் துாக்கிட்டு தற்கொலை செய்தனர்.
சிவகாசி அருகே பாறைப்பட்டி அச்சு தொழிலாளி ஜெயச்சந்திரன் 51. மனைவி ஞானபிரகாசி 48, மகள் சர்மிளா, மகன் ஜெயசூர்யா 22. கணவரின் மருத்துவ சிகிச்சைக்காகவும், மகளின் படிப்பு செலவிற்காகவும் ரூ. 2.70 லட்சத்தை கடனாக ஞானபிரகாசி பெற்றார். பணம் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததாலும் ஜூன் 4 இரவு ஞானபிரகாசி, மகள் சர்மிளா துாக்கிட்டு தற்கொலை செய்தனர்.
திருத்தங்கலைச் சேர்ந்தவர் தீபாலட்சுமி 38. இவரின் தங்கை சண்முகபிரியா, இருவரும் குடும்ப சூழ்நிலை காரணமாக வாங்கிய கடனை செலுத்தமுடியவில்லை. இந்த கடனை உடனடியாக திரும்ப கொடுக்கவிட்டால் கொலை செய்து விடுவோம் என கந்து வட்டி கும்பலைச் சேர்ந்த ஈஸ்வரபாண்டி 44, வைரமணி 43, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இது போன்ற தற்கொலைகளில் கடன் கொடுத்தவர்கள் கொடுக்கும் நெருக்கடி, கொலை மிரட்டல்களை தாங்க முடியாமல் தற்கொலைகள் நடக்கிறது. மாவட்ட நிர்வாகம் கந்து வட்டி கும்பல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.