ADDED : ஜூலை 11, 2024 04:46 AM

விருதுநகர்: அங்கன்வாடி திட்டத்தை தனியாருக்கு கொடுக்கலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்த ஜூலை 10ஐ கருப்பு தினமாக அனுசரித்து நேற்று விருதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் எஸ்தர் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் நாகலட்சுமி, மாவட்ட செயலாளர் பாண்டியம்மாள் பேசினர்.