/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ உயிர் பலி வாங்க துடிக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி உயிர் பலி வாங்க துடிக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி
உயிர் பலி வாங்க துடிக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி
உயிர் பலி வாங்க துடிக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி
உயிர் பலி வாங்க துடிக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டி
ADDED : ஜூன் 09, 2024 02:38 AM

சிவகாசி : வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் சேதம் அடைந்து உயிர் பலி வாங்க காத்துக் கொண்டிருக்கும் மேல்நிலை குடிநீர் தொட்டியால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வெம்பக்கோட்டை ஒன்றியம் செவல்பட்டியில் ரைஸ்மில் பஸ் ஸ்டாப் அருகே குடியிருப்புகளுக்கு மத்தியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. இத்தொட்டியில் இருந்து அப்பகுதி மக்களுக்கு இப்போதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இந்நிலையில் தொட்டி முற்றிலும் சேதமடைந்துள்ளது.
துாண்களில் சிமெண்ட் பெயர்ந்து துருப்பிடித்த கம்பிகளால் தாங்கி நிற்கிறது. மேலும் அவ்வப்போது சிமெண்ட் கற்கள் பெயர்ந்து விழுகின்றது. ஆபத்து என தெரிந்தும் இப்பகுதி மக்கள் தொட்டி குழாயில் இருந்து கசியும் நீரை சேகரிக்கின்றனர். தொட்டி குடியிருப்புகளுக்கு மத்தியில் இருப்பதோடு ரோட்டின் ஓரத்திலும் அமைந்துள்ளது. இதனால் இதனை கடந்து செல்கின்ற மக்கள் அச்சத்துடனே செல்ல வேண்டி உள்ளது.
அருகிலேயே கடைகளும் உள்ளது. பஸ் ஸ்டாப் என்பதால் பஸ்சிற்காக பயணிகளும் இடிந்த தொட்டி அருகிலேயே காத்திருக்கின்றனர். மக்கள் நடமாடும் போது தொட்டி இடிந்து விழுந்தால் பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும். எனவே உடனடியாக தொட்டியை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.