/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஆளுக்கொரு மரம்: கலெக்டர் வேண்டுகோள் ஆளுக்கொரு மரம்: கலெக்டர் வேண்டுகோள்
ஆளுக்கொரு மரம்: கலெக்டர் வேண்டுகோள்
ஆளுக்கொரு மரம்: கலெக்டர் வேண்டுகோள்
ஆளுக்கொரு மரம்: கலெக்டர் வேண்டுகோள்
ADDED : ஜூன் 08, 2024 05:41 AM
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மே 22 உலக பல்லுயிர் தினத்தை முன்னிட்டு அரசுத்துறைகள் சார்பில் 5 லட்சம் மரக்கன்றுகளும், ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, 10 லட்சம் மரக்கன்றுகளும் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் முழுவதும் மாவட்டத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. மாவட்டத்தில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடுவதற்கான முயற்சிகள் செய்யப்பட்டு வருகிறது.
எனவே இந்த முயற்சியில் அனைவரும் தவறாது பங்கு கொண்டு ஒரு மக்கள் இயக்கமாக இணைந்து மரக்கன்றுகளை நட வேண்டும். தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கி நல்ல மழைப்பொழிவு இருப்பதால், அனைத்து நீர் நிலைகள், குளங்களில் நீர் நிரம்பி வருகிறது. அதனை பயன்படுத்தி அந்தந்த பகுதியில் உள்ள மக்கள், தொழில் நிறுவனங்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் மரம் நடவேண்டும். 'வீட்டிற்கு ஒரு மரம் என்பது போல் ஆளுக்கொரு மரம்' என்று இந்த மாதத்தில் அனைவரும் மரம் நட வேண்டும், என வேண்டுகோள் விடுத்துள்ளார்.