Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ மிளகாய் மண்டல திட்டத்தில் 450 எக்டேர் கூடுதல் சாகுபடி

மிளகாய் மண்டல திட்டத்தில் 450 எக்டேர் கூடுதல் சாகுபடி

மிளகாய் மண்டல திட்டத்தில் 450 எக்டேர் கூடுதல் சாகுபடி

மிளகாய் மண்டல திட்டத்தில் 450 எக்டேர் கூடுதல் சாகுபடி

ADDED : ஜூன் 20, 2024 04:11 AM


Google News
விருதுநகர்: விருதுநகர் மிளகாய் மண்டல திட்டத்தில் 2024-24ம் ஆண்டிற்கு கூடுதலாக 450 எக்டேர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலை துணை இயக்குனர் சுபாவாசுகி தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் சாத்துார், விருதுநகர், நரிக்குடி, திருச்சுழி, சிவகாசி பகுதிகளில் அதிகளவில் மிளகாய் சாகுபடி செய்யப்படுகிறது. வேளாண் பட்ஜெட்டில் விருதுநகர் மாவட்டத்திற்கு மிளகாய் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி வழக்கமாக உள்ள 2002 எக்டேர் மிளகாய் சாகுபடி பரப்புடன் கூடுதலாக 450 எக்டேர் சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டும்.

அதாவது தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 200 ஏக்கர், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் 250 எக்டேர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கபட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 1 எக்டேருக்கு 12 ஆயிரம் மிளகாய் குழித்தட்டு நாற்றங்கால் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் வீரியமிக்க உற்பத்தியை அதிகரிக்க முடியும். மேலும் 150 எக்டேர் தரிசு நிலங்களில் உள்ள முட்புதர்களை அகற்றி மேம்படுத்தி மிளகாய் சாகுபடி செய்யவும் 1 எக்டேருக்கு ரூ.5 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது, என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us