ADDED : ஜூலை 11, 2024 04:44 AM

விருதுநகர்: விருதுநகரில் கலெக்டர் அலுவலகம் முன் ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஊராட்சிகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி சட்டத்தின் படி ஊதியம் நிர்ணயம் செய்து அரசாணை அரசிதழில் வெளியிட்ட நாள் முதல் நிலுவை தொகை வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், துணை தலைவர் முனியப்பன் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., தேசிய நிர்வாக குழு உறுப்பினர் ராமசாமி பேசினார்.