/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கள்ளக்காதலியை கழுத்தறுத்து கொலை செய்த கள்ளக்காதலன் கள்ளக்காதலியை கழுத்தறுத்து கொலை செய்த கள்ளக்காதலன்
கள்ளக்காதலியை கழுத்தறுத்து கொலை செய்த கள்ளக்காதலன்
கள்ளக்காதலியை கழுத்தறுத்து கொலை செய்த கள்ளக்காதலன்
கள்ளக்காதலியை கழுத்தறுத்து கொலை செய்த கள்ளக்காதலன்
ADDED : ஜூலை 11, 2024 10:53 PM

காரியாபட்டி:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அல்லிக்குளத்தைச் சேர்ந்த நாகலட்சுமியை 23, மத்திய சேனையைச் சேர்ந்த ராஜபாண்டி 27, கழுத்தறுத்து கொலை செய்தார்.
காரியாபட்டி அல்லிக்குளத்தைச் சேர்ந்தவர் நாகலட்சுமி. கணவர் பீமாராஜ் 30. திருமணம் முடித்து அல்லிக்குளத்தில் வசித்தனர். பீமராஜ் மதுரையில் வேலை பார்த்து வருகிறார்.
மத்தியசேனையைச் சேர்ந்த ராஜபாண்டிக்கு திருமணமாகி இரு பெண் குழந்தைகள் உள்ளது. உறவினரான அவருடன் நாகலட்சுமிக்கு தொடர்பு ஏற்பட்டது. நேற்று காரியாபட்டியில் உள்ள வங்கிக்கு நாகலட்சுமி, அவரது ஒரு வயது மகன், உறவினர் பவித்ரா வந்தனர். அங்கு வந்த ராஜபாண்டி மூவரையும் டூவீலரில் எஸ். கல்லுப்பட்டி பகுதிக்கு கூட்டிச் சென்றார். அங்கு குழந்தையையும் பவித்ராவையும் ரோட்டில் இறக்கிவிட்டு நாகலட்சுமியை காட்டுப்பகுதிக்குள் அழைத்துச் சென்றார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின் ராஜபாண்டி மட்டும் டூவீலரில் தனியாக வேகமாக சென்றதை பார்த்த பவித்ரா சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தார். அங்கு நாகலட்சுமி கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். உடனடியாக அவர் தனது தாயாருக்கு போனில் தகவல் கொடுத்தார். காரியாபட்டி போலீசார் நாகலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி ராஜபாண்டியை தேடி வருகின்றனர்.