/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ 1.6 கிலோ கஞ்சா பறிமுதல் பெண்கள் உட்பட 10 பேர் கைது 1.6 கிலோ கஞ்சா பறிமுதல் பெண்கள் உட்பட 10 பேர் கைது
1.6 கிலோ கஞ்சா பறிமுதல் பெண்கள் உட்பட 10 பேர் கைது
1.6 கிலோ கஞ்சா பறிமுதல் பெண்கள் உட்பட 10 பேர் கைது
1.6 கிலோ கஞ்சா பறிமுதல் பெண்கள் உட்பட 10 பேர் கைது
ADDED : ஜூலை 11, 2024 04:37 AM
சிவகாசி: சிவகாசியில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தவர்களிடமிருந்து 1.6 கிேலா கஞசா பறிமுதல் செய்யப்பட்டதோடு, இரு பெண்கள் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி அருகே கங்காகுளத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள் 48,. இவரது மகன் மாரீஸ்வரன் 23. இருவரும் தனது வீட்டருகே பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்தனர். முனியம்மாளை திருத்தங்கல் போலீசார் கைது செய்து, 50 கிராம் கஞ்சா, டூ வீலர் பறிமுதல் செய்தனர். மாரீஸ்வரனை தேடுகின்றனர்.
ஆலாவூரணியை சேர்ந்தவர் பாண்டியம்மாள் 45 . இவர் சிவகாசி பர்மா காலனியில் வீடு எடுத்து தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தார். கிழக்கு போலீசார், அவரது வீட்டில் சோதனை செய்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பாண்டியம்மாள் , அவருடன் இருந்த அதிவீரன்பட்டியைச் சேர்ந்த அரிபாண்டி 22, ஆகாஷ் 21, ஆகியோரை கைது செய்தனர்.
சிவகாசி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக கஞ்சாவுடன் நின்ற செல்வகணபதி 19, வினோத் குமார் 27, சிவபிரகாஷ் 19, பூபேஷ் குமார் 21, கற்குவேல் 22, ஆகியோரை டவுன் போலீசார் கைது செய்து 475 கிராம் கஞ்சா, டூ வீலரை பறிமுதல் செய்தனர்.