ADDED : ஜன 29, 2024 04:56 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் போக்குவரத்து போலீஸ் சார்பில் சாலை பாதுகாப்பு, போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து விழிப்புணர்வு தெருக்கூத்து நாடகம் நடந்தது.
ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் தலைமை வகித்தார். போக்குவரத்து எஸ்.ஐ.,க்கள் கமலக்கண்ணன் பரமசிவம் முன்னிலை வகித்தனர்.
ராஜூக்கள் கல்லுாரி மாணவர்கள் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் மது போதையில், லைசென்ஸ் இன்றி, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, வாகனங்களை நடுவிதிகளில் நிறுத்துவது பற்றியும், சீல்டு பெல்ட் அணிவதன் அவசியம் குறித்தும் ஊமை நாடகம் மூலம் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாகன ஓட்டிகள், ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.