/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆர்.ஐ., போனில் 'டார்ச்சர்'; முதல்வருக்கு பெண் புகார் மனு ஆர்.ஐ., போனில் 'டார்ச்சர்'; முதல்வருக்கு பெண் புகார் மனு
ஆர்.ஐ., போனில் 'டார்ச்சர்'; முதல்வருக்கு பெண் புகார் மனு
ஆர்.ஐ., போனில் 'டார்ச்சர்'; முதல்வருக்கு பெண் புகார் மனு
ஆர்.ஐ., போனில் 'டார்ச்சர்'; முதல்வருக்கு பெண் புகார் மனு
ADDED : செப் 12, 2025 07:55 AM
செஞ்சி; பட்டா கேட்டு மனு அளித்த பெண்ணுக்கு மொபைல் போனில் பாலியல் டார்ச்சர் கொடுத்த ஆர்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க, முதல்வருக்கு புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர், தான் வசிக்கும் நத்தம் புறம்போக்கு இடத்திற்கு இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு, கடந்த ஜூலை 28ம் தேதி திண்டிவனம் சப் கலெக்டரிடம் மனு கொடுத்தார்.
அந்த மனு ஆர்.ஐ.,யிடம் விசாரணைக்கு வந்தது. ஆனால் மனு மீது விசாரணை நடத்தி முடிவு செய்யாமல் ஒரு மாதமாக அவர் அலை கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அந்த பெண் ஆர்.ஐ., அலுவலகம் சென்றபோது, அவர் இல்லாததால், மொபைல் போனில் பேசியுள்ளார்.
அப்போது, அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக டார்ச்சர் கொடுத்து பேசியுள்ளார். இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் அப்பெண், முதல்வர் ஸ்டாலினுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில், ஆர்.ஐ., மீது புகார் தெரிவித்து, 'விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம்' என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.