/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வீடு கட்டுவதில் ரூ. 5 கோடி மோசடி; மூதாட்டி புகாரில் ஒப்பந்ததாரர் கைது வீடு கட்டுவதில் ரூ. 5 கோடி மோசடி; மூதாட்டி புகாரில் ஒப்பந்ததாரர் கைது
வீடு கட்டுவதில் ரூ. 5 கோடி மோசடி; மூதாட்டி புகாரில் ஒப்பந்ததாரர் கைது
வீடு கட்டுவதில் ரூ. 5 கோடி மோசடி; மூதாட்டி புகாரில் ஒப்பந்ததாரர் கைது
வீடு கட்டுவதில் ரூ. 5 கோடி மோசடி; மூதாட்டி புகாரில் ஒப்பந்ததாரர் கைது
ADDED : செப் 12, 2025 07:56 AM
விழுப்புரம்; மூதாட்டிக்கு வீடுகட்டுவதில் ரூ.5 கோடி வரை மோசடி செய்ததாக எழுந்த புகாரில், கட்டட ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், பொம்மையார்பாளையத்தை சேர்ந்தவர் டேனியல் பெல்நெக் மனைவி மகதி,69; இவருக்கு சொந்தமான இடத்தில் அரண்மனை மாடலில் வீடு கட்ட முடிவு செய்து, கடந்த 2021ம் ஆண்டு இரு நபர்கள் மூலம் பணியை துவக்கினார்.
அதன் பிறகு, மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார், மீனவர் தெருவை சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் சித்தார்த்,33; என்பவர் மூலம் எஞ்சிய கட்டடத்தை கட்டியுள்ளார்.
இந்த கட்டட பணிக்கு, இதுவரை ரூ.11 கோடியே 67 லட்சத்து 46 ஆயிரத்து 217, மகதி வங்கி பரிவர்த்தனை மூலம் அனுப்பியுள்ளார். அதில், சித்தார்த் வங்கி கணக்கிற்கு மட்டும் ரூ. 1 கோடியே 72 லட்சத்து 96 ஆயிரத்து 932 அனுப்பியுள்ளார். சித்தார்த், அந்த பணத்தில் வாங்கிய பல கட்டுமான பொருட்களை மகதிக்கு சொந்தமான கட்டடத்தில் பயன்படுத்தாமல் திருடியுள்ளதாக தெரிகிறது.
மேலும், அவர், போலியான ரசீதுகளை காண்பித்து சுமார் ரூ.5 கோடி வரை மகதியை ஏமாற்றி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் மகதி புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிந்து சித்தார்த்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.