மதுபாட்டில் வைத்திருந்த பெண் கைது
மதுபாட்டில் வைத்திருந்த பெண் கைது
மதுபாட்டில் வைத்திருந்த பெண் கைது
ADDED : செப் 10, 2025 08:50 AM

விழுப்புரம்; விழுப்புரம் தாலுகா போலீசார் நேற்று புதிய பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அங்கு, பையோடு சந்தேகப்படும் நிலையில் நின்றிருந்த பெண்ணை விசாரணை செய்தனர். அவர் பையை சோதனை செய்ததில், புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் இருந்ததை கண்டறிந்தனர்.
பின் விசாரணை செய்ததில் அவர், வேட்டவலம் பகுதியை சேர்ந்த தமிழ்வேலன் மனைவி பூங்கொடி,49; என்பது தெரியவந்தது. அவர் வசிக்கும் பகுதியில் கூடுதல் விலையில் விற்க மதுபாட்டில்களை புதுச்சேரியில் வாங்கி, கொண்டு சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, போலீசார் அவரிடம் இருந்த, 96 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, பூங்கொடியை கைது செய்தனர்.