/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஊமத்தங்காய் கலந்த போலி 'கள்' விற்பனை போலீஸ் உயரதிகாரிகள் கவனிப்பார்களா?ஊமத்தங்காய் கலந்த போலி 'கள்' விற்பனை போலீஸ் உயரதிகாரிகள் கவனிப்பார்களா?
ஊமத்தங்காய் கலந்த போலி 'கள்' விற்பனை போலீஸ் உயரதிகாரிகள் கவனிப்பார்களா?
ஊமத்தங்காய் கலந்த போலி 'கள்' விற்பனை போலீஸ் உயரதிகாரிகள் கவனிப்பார்களா?
ஊமத்தங்காய் கலந்த போலி 'கள்' விற்பனை போலீஸ் உயரதிகாரிகள் கவனிப்பார்களா?
ADDED : பிப் 06, 2024 06:08 AM
கோடை துவங்கி வெயில் வாட்டி எடுக்க துவங்கி விட்டது. தர்பூசணி, இளநீர், குளிர்பானங்களின் விற்பனை ஒருபுறம் சூடு பிடித்துள்ளது. அதே வேளையில் டாஸ்மாக்கில் பீர் விற்பனையும், கள்ள மார்க்கெட்டில் 'கள்' விற்பனையும் அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் அதிக பனை மரங்கள் உள்ள பகுதியாக செஞ்சி, மேல்மலையனுார் பகுதிகள் உள்ளன. கோடை துவங்கியதும் இப்பகுதிகளில் 'கள்' விற்பனையும் துவங்கி விடும்.
குறிப்பாக அவலுார்பேட்டை மற்றும் செஞ்சியை ஒட்டியுள்ள சில கிராமங்களிலும் 'கள்' விற்பனை அதிகளவில் இருக்கும். இந்த ஆண்டு துவக்கத்திலேயே 'கள்' விற்பனை சூடு பிடித்துள்ளது. கலப்படம் இல்லாத ஒரிஜினல் 'கள்' குடிப்பதால் பக்க விளைவுகள் குறைவு. ஆனால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 'கள்' உற்பத்தி இல்லை.
இதை சமாளிக்க 'கள்' தயாரிப்பவர்கள் வெண்பூசணிக்காய், ஊமத்தங்காய் கொண்டு செயற்கையாக 'கள்' தயாரிக்கின்றனர். இதில், போதையைக் கூட்ட போதை மாத்திரைகளையும் பயன்படுத்தி ஒரிஜினல் 'கள்'ளுடன் கலந்து விற்பனை செய்கின்றனர். இந்த 'கள்'ளை குடிப்பவர்களுக்கு போதை அதிகம் இருக்கும். இந்த போதைக்கு அடிமையாகி மீண்டும் மீண்டும் அதே விற்பனையாளரைத் தேடி வருவார்கள்.
இந்த போலி 'கள்'ளை குடிப்பவர்களுக்கு உடல் நலம் பெரிய அளவில் பாதிக்கப்படும். அதுமட்டுமின்றி ஊமத்தங்காய் மூளையையும், மனநலத்தையும் பாதிக்கும். ஒவ்வொரு 'கள்' சீசனிலும் போலீசார் சிலரை கைது செய்வார்கள்.
ஆனாலும் விற்பனை தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். இனி வரும் காலங்களில் கைது செய்யப்படும் நபர்கள் விற்பனை செய்யும் 'கள்'ளை ஆய்வகங்களுக்கு அனுப்பி அதில் உள்ள மூலப் பொருட்கள் கண்டறிந்தால் போலி 'கள்'ளில் உள்ள ஆபத்து தெரியவரும்.
இது போன்றவர்களை வெறும் 'கள்' விற்பனை சட்டத்தின் கீழ் கைது செய்யாமல் இந்திய மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தில் உள்ள தண்டனை சட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்ய வேண்டும்.
எனவே காவல் துறை உயர் அதிகாரிகள் சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து போலி 'கள்' விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.