/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/செஞ்சியில் பஸ் நிலையம் திறக்கும் முன் சாலையோர மண் குவியல் அகற்றப்படுமா?செஞ்சியில் பஸ் நிலையம் திறக்கும் முன் சாலையோர மண் குவியல் அகற்றப்படுமா?
செஞ்சியில் பஸ் நிலையம் திறக்கும் முன் சாலையோர மண் குவியல் அகற்றப்படுமா?
செஞ்சியில் பஸ் நிலையம் திறக்கும் முன் சாலையோர மண் குவியல் அகற்றப்படுமா?
செஞ்சியில் பஸ் நிலையம் திறக்கும் முன் சாலையோர மண் குவியல் அகற்றப்படுமா?
ADDED : ஜன 03, 2024 12:08 AM
செஞ்சி : செஞ்சியில் பஸ் நிலையம் திறப்பதற்கு முன்பாக சாலையை ஆக்கிரமித்து கொட்டியுள்ள உள்ள மண் குவியல்களையும், நடை பாதை ஆக்கிரமிப்பையும் நெடுஞ்சாலைத்துறையினர் அகற்ற வேண்டும்.
செஞ்சி பஸ் நிலையம் 6.74 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டது. நாளை 4ம் தேதி திறக்க இருப்பதாக பேரூராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
செஞ்சியில் பஸ் நிலைய விரிவாக்க பணி துவங்கிய போது பஸ் நிலையத்தை திண்டிவனம் சாலைக்கு தற்காலிகமாக மாற்றியுள்ளனர். பஸ் நிலைய விரிவாக்க பணிகள் நடந்த அதே காலத்தில் கழிவு நீர் கால்வாய் புதுப்பிக்கும் பணியும் நடந்தது.
இந்த பணிக்கு பிறகு சாலையின் அகலம் மேலும் குறைந்துள்ளது. புதிதாக கட்டியுள்ள சிமென்ட் கால்வாய்க்கு அடுத்துள்ள பகுதி பள்ளமாக உள்ளது.
பள்ளமாக இருந்த இடத்தில் கடைக்காரர்கள் மண்ணைக் கொட்டி மேடாக்கி வைத்துள்ளனர். இதனால் சாலையின் அகலம் குறைந்துள்ளது. அத்துடன் மழை நீர் கழிவு நீர் கால்வாயில் செல்ல முடியாமல் மண் மேடுகள் மூடி உள்ளன.
தற்போதுள்ள நிலையில் பஸ் நிலையம் திறந்தால் இந்த வழியாக பஸ்கள் வரும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
எனவே, சாலையோரங்களில் கொட்டியுள்ள மண் குவியல்களை பள்ளங்களில் நிரப்பி சமன்படுத்தவும், கால்வாய்க்கு அடுத்துள்ள பள்ளத்தை இரு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதியாக தார் சாலைக்கு இணையாக மேடாக உயர்த்த வேண்டும்.
அத்துடன் இரண்டு ஆண்டாக பஸ் போக்குவரத்து இல்லை என்பதால் நடைபாதையிலும், தார் சாலையிலும் ஏராளமான ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைபாதை மற்றும் தார் சாலையை பொது மக்கள் முழுயாக பயன்படுத்த நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.