/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விழுப்புரம் எஸ்.பி., சசாங்சாய்க்கு வாழ்த்தி வழியனுப்பிய போலீசார்விழுப்புரம் எஸ்.பி., சசாங்சாய்க்கு வாழ்த்தி வழியனுப்பிய போலீசார்
விழுப்புரம் எஸ்.பி., சசாங்சாய்க்கு வாழ்த்தி வழியனுப்பிய போலீசார்
விழுப்புரம் எஸ்.பி., சசாங்சாய்க்கு வாழ்த்தி வழியனுப்பிய போலீசார்
விழுப்புரம் எஸ்.பி., சசாங்சாய்க்கு வாழ்த்தி வழியனுப்பிய போலீசார்
ADDED : ஜன 11, 2024 04:17 AM
விழுப்புரம்: விழுப்புரம் எஸ்.பி., சசாங்சாய்க்கு, போலீசார் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பினர்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தலையொட்டி 47 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டனர். இதில், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., ஜியாவுல்ஹக், விழுப்புரம் எஸ்.பி., சசாங்சாய் ஆகியோரும் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, விழுப்புரம் எஸ்.பி., சசாங்சாய் நேற்று இரவு, விழுப்புரத்திலிருந்து பணி நிறைவு செய்து புறப்பட்டார்.
இதனால், விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று எஸ்.பி., சசாங்சாயை, ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் பலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பினர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில், கள்ளச்சாராய பலி சம்பவம் நடந்த இக்கட்டான நேரத்தில் எஸ்.பி.,யாக அவர், கடந்த மே.25ம் தேதி பொறுப்பேற்றார். 7 மாதங்கள் சிறப்பாக பணியாற்றிய அவர், தவறு செய்த போலீசார் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்தாலும், பல போலீசாருக்கும், துறை சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுத்துள்ளார்.
இதனால், பலர் நெகிழ்ச்சியோடு அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து அனுப்பினர். தற்போது, விழுப்புரம் எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ள தீபக்சிவாஜ், வெள்ளிக்கிழமை பொறுப்பேற்க உள்ளார்.