/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாணவர்களுக்கு பாடம் எடுக்காத 3 ஆசிரியர்களுக்கு விளக்க நோட்டீஸ் விழுப்புரம் சி.இ.ஓ., அதிரடி மாணவர்களுக்கு பாடம் எடுக்காத 3 ஆசிரியர்களுக்கு விளக்க நோட்டீஸ் விழுப்புரம் சி.இ.ஓ., அதிரடி
மாணவர்களுக்கு பாடம் எடுக்காத 3 ஆசிரியர்களுக்கு விளக்க நோட்டீஸ் விழுப்புரம் சி.இ.ஓ., அதிரடி
மாணவர்களுக்கு பாடம் எடுக்காத 3 ஆசிரியர்களுக்கு விளக்க நோட்டீஸ் விழுப்புரம் சி.இ.ஓ., அதிரடி
மாணவர்களுக்கு பாடம் எடுக்காத 3 ஆசிரியர்களுக்கு விளக்க நோட்டீஸ் விழுப்புரம் சி.இ.ஓ., அதிரடி
ADDED : ஜூன் 26, 2025 02:28 AM
திண்டிவனம்: திண்டிவனம் அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் மாணவர்களுக்கு வகுப்பறையில் பாடம் எடுக்காமல், ஓய்வறையில் இருந்த மூன்று ஆசிரியர்களுக்கு சி.இ.ஓ., விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
திண்டிவனத்தில் அரசு நிதியுதவி பெறும் வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு நேற்று பிற்பகல் திடீரென வந்த விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 2 முதுகலை ஆசிரியர்கள், ஒரு பட்டதாரி ஆசிரியர் என மூன்று பேர், வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் எடுக்காமல், பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் ஒய்வறையில் இருந்தனர். இதை கண்ட சி.இ.ஓ., சம்பந்தப்பட்ட மூன்று ஆசிரியர்களுக்கும் விளக்கம் அளிக்க நோட்டீஸ் வழங்கினார்.
ஆசிரியர்கள் விளக்கம் அளித்த பிறகு, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்யப்படும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.